திருப்பூர், நவ. 3- திருப்பூர் அரசு மருத்துவமனையில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பருவ மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் சுகாதாரப் பணிகள் மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சிட்கோ பொன்னாபுரம், அண்ணா நகர், விஜயாபுரம், நல்லூர், மணியக்காரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 6பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிறுவர்களும் அடங்குவர். இவர்கள் 24 மணி நேர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.