ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்கும் உத்தரவு ரத்து கோரி ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, அக்24- இந்தியாவில் உள்ள 50 ரயில் நிலையங்களையும், லாபகரமாக இயங்கும் 150 விரைவு ரயில்க ளையும் தனியாரிடம் ஒப்படைக்க நிதி ஆயோக் முதன்மை செயல் அதிகாரி அமிதாப் தலைமையி லான கமிட்டி அமைத்து கடந்த 10 ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தனியாரிடம் ஒப்படைக்கும் தீய நோக்கில் 33 வருட சர்வீஸ் முடிந்த வர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுக் கும் திட்டத்தை கைவிட வேண்டும். அனைவரின் நிரந்தர வேலை வாய்ப்பை பறித்து ஒப்பந்த ஊழி யர்கள் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி டிஆர்யூ தொழிற்சங்கத்தி னர் புதனன்று மாலை திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவ லகம் முன் கோட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் கன்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்டத் தலைவர் வெங்கடேசன் கோரிக்கைகளை விளக்கி பேசி னார். இதில் உதவி பொது செயலா ளர்கள் மாதவன், மனோகரன், பொ ருளாளர் சுப்பிரமணியன் மற்றும் ரயில்வே தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
குடிநீர் கேட்டு சாலை மறியல்
திருச்சிராப்பள்ளி, அக்.24- திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் உள்ள இந்திரா நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக காவிரி நீர் வினியோகம் செய்யப் படவில்லை. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இது குறித்து ஊராட்சி நிர்வா கத்திடம் பலமுறை கூறியும் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. இதனை கண்டித்தும், இப்பகு திக்கு உடனே குடிநீர் வழங்க வலி யுறுத்தியும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தொடர்பு கொண்டு காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதி அளித்த தின் பேரில் பொதுமக்கள் போராட் டத்தை கைவிட்டு சென்றனர்.
மாற்றுத்திறனாளிகள் சங்கப் போராட்டத்தால் குறை தீர்ப்பு கூட்டம்: அதிகாரிகள் நடவடிக்கை
கும்பகோணம், அக். 24- தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளி கள் உதவித்தொகை மற்றும் பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாதம் தோறும் மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் தலைமையில் நடத்தப்பட வேண்டும் அதில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அனை வரும் கலந்து கொள்ள வேண்டும் என கடந்த அக்டோ பர் 19 ஆம் தேதி காத்திருப்புப் போராட்டம் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. அப்போது கும்பகோணம் கோட்டாட்சியர் விரைவில் அனைத்து துறை அலுவ லர்களை கொண்டு மாற்றுத்திறனாளிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும் என்று உறுதி அளித் தார். இச்செய்தி தீக்கதிரில் பிரசுரிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக புதன்கிழமை அன்று கும்பகோணம் கோட்டாட்சியர் வீராச்சாமி தலை மையில் பொது மருத்துவர் மற்றும் வட்டாட்சியர்கள் போக்குவரத்து துறையினர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் குறையை கேட்டறிந்தனர். மாற்றுத்திறனாளிகள் 32 கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கினர். மனுக்களை தகுதி அடிப்படையில் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாதம் தோறும் மூன்றாவது வியாழக்கிழமைகளில் தொடர்ந்து கூட்டம் நடைபெறும் என கூட்டத்தில் தெரிவிக் கப்பட்டது. இக்கூட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்க ஒன்றிய தலைவர் சுகு மாறன், செயலாளர் சரவணன், துணை செயலாளர் சேகர் பொருளாளர் சுபாஷ் உள்ளிட்ட ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். மேலும் இதுகுறித்து மாற்றுத்திறனாளி சங்க பொறுப்பாளர்கள் கூறும்போது, இதுபோன்று மாதம் தோறும் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கும்பகோணம் கோட்டாட்சிக்கு உட்பட்ட அனைத்து மாற்றுத்திற னாளிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து உடன் தீர்வளிக்க வேண்டும் மேலும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளை கூட்டத்தில் பங்கேற்று உடனடித் தீர்வுக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.