tamilnadu

தஞ்சாவூரில் டி.கே.ஜி.நீலமேகம் பிரச்சாரம்

தஞ்சாவூர், ஏப்.7-தஞ்சாவூர் சட்டப்பேரவை தொகுதிதிமுக வேட்பாளர் டி.கே.ஜி.நீலமேகம், தஞ்சாவூர் வண்டிக்காரத் தெரு பகுதியில் தனது தேர்தல் பரப்புரையில், சாந்தப்பிள்ளை கேட் மரணப் பாலத்தைநீட்டிப்பு செய்து, நாஞ்சிக்கோட்டை பகுதியிலிருந்து வாகனங்களில் வருவோர் போக்குவரத்து இடையூறு இல் லாமல் வரும் வகையில் அதற்கான திட்டங்களை செயல்படுத்துவேன்.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் பாதிக் கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மறுவாழ்வுக்கான திட்டங்கள் செயல் படுத்தப்படும். குடிநீர் பற்றாக்குறை பிரச்சனை சரி செய்யப்படும். பல ஆண்டுகளாக பாதாள சாக்கடை இணைப்பு கேட்டுள்ளவர்களுக்கு உடனடியாக இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என வாக்குறுதிகள் வழங்கினார். பரப்புரையின் போது, திமுக தஞ்சாவூர் தெற்குமாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சொக்கா.ரவி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.