tamilnadu

img

திருச்சியில் திருநாவுக்கரசர் வாக்கு சேகரிப்பு

திருச்சிராப்பள்ளி,ஏப்.16-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் செவ்வாய் அன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.இதில் அவர் பேசுகையில், தொகுதியின் அனைத்து பகுதிகளுக்கும் அடிப்படை வசதிகளை செய்து வளர்ச்சிக்கு பாடுபடுவேன். மாணவர்கள் கல்வியை உறுதிப்படுத்துதல், இளைஞர் வேலைவாய்ப்பை உருவாக்க முயற்சி, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் அனைத்து திட்டங்கள், உதவிகளையும் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பேன் என்றார். பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்பட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.