tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மனிதச் சங்கிலி மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திருச்சிராப்பள்ளி, ஜன.31- குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மத்திய பாஜக அரசின் மும்முனைத் தாக்குத லைக் கண்டித்து, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் ஜன.26 ஆம் தேதி முதல் எழுச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஜன.30 வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை மனிதச் சங்கிலி இயக்கம் நடைபெற்றது. டெல்டா மாவட்டங்களில் நடைபெற்ற மனி தச்சங்கிலி போராட்டத்தில் பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 

திருச்சிராப்பள்ளி

திருச்சி தலைமை தபால் நிலையம் முதல் காந்தி மார்க்கெட் பகுதிகளில் மனிதச்சங்கிலி போராட்டம் நடை பெற்றது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் சுப்ரம ணியன் தலைமை வகித்தார். கோரிக்கை களை வலியுறுத்தி சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ். ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் உள்ளிட்ட பலர் பேசினர்.

கரூர்

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை யின் சார்பில் கரூர் ஜவஹர் பஜார் காமராஜர் சிலை முதல் தலைமை தபால் நிலையம் வரை மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.ஜோதிபாசு தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, மாவட்ட செயற்குழு  உறுப்பினர்கள் பங்கேற்றனர். 

தஞ்சாவூர் 

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலை யத்தில் இருந்து தொடங்கி, ரயிலடி வரை நடைபெற்ற மனிதச்சங்கிலி போராட்டத்தில் 200 பெண்கள் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வெ.ஜீவகுமார், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், மாநகரச் செயலா ளர் என்.குருசாமி, மாவட்டக்குழு சரவணன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தஞ்சை மாநகர நிர்வாகி அப்துல் நசீர் மற்றும் பல்வேறு கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

பேராவூரணி 

பேராவூரணி பெரியார் சிலை தொடங்கி அரசு மருத்துவமனை வரை நடைபெற்ற மனிதச்சங்கிலி போராட்டத் தில் அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர். வாசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கோவிலூர்

அம்மாபேட்டை ஒன்றியம் கோவி லூரில் தஞ்சை-நாகை நெடுஞ்சாலை மனிதச்சங்கிலியில் சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி, ஒன்றியச் செயலாளர் ஏ.நம்பிராஜ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஒரத்தநாட்டில் நடைபெற்ற மனி தச்சங்கிலி போராட்டத்திற்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என்.சுரேஷ் குமார் தலைமை வகித்தார். 

பட்டுக்கோட்டை 

பட்டுக்கோட்டை பேருந்து நிலை யம் தொடங்கி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வரை நடைபெற்ற மனித சங்கிலிப் போராட்டத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். பூதலூர் 4 ரோடு அருகில் நடைபெற்ற மனிதச்சங்கிலி போராட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி.கண்ணன், பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி. பாஸ்கர், மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் சோலை தெட்சி ணாமூர்த்தி, இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்ட 600 பேர் கலந்து கொண்டனர். 

மதுக்கூர் 

மதுக்கூரில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நடைபெற்ற மனி தச்சங்கிலி போராட்டத்திற்கு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வை.சிதம்பரம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு தொடங்கி வைத்தார்.  வல்லம் ஜூம்ஆ பள்ளிவாசலில் ஆரம்பித்து வலதுபுற மாக வல்லம் பேருந்து நிலையம் வரை யிலும், இடது புறமாக வல்லம் கடைவீதி வரை நடைபெற்ற மனிதச்சங்கிலி போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் எம்.மாலதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருக்காட்டுப்பள்ளி

திருக்காட்டுப்பள்ளியில் நடை பெற்ற மனிதச்சங்கிலி போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே. காந்தி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்ற னர். சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில், கழுமங்குடா முதல் சேதுபாவாசத்திரம் கடைவீதி வரை, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நடைபெற்ற மனிதச்சங்கிலி போராட்டத்தில் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டக்குழு உறுப்பினர் வீ.கருப்பையா, ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி கலந்து கொண்டனர். சம்பைபட்டினம், செந்தலைப்பட்டினம் உள்ளிட்ட இடங்களிலும் மனிதச் சங்கிலி நடைபெற்றது.

ஊரணிபுரம் 

ஊரணிபுரம் கடைவீதியில் நடை பெற்ற மனிதச்சங்கிலி போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் பி.கோவிந்தராஜூ, மாவட்டக்குழு உறுப்பினர் கே.ராம சாமி கலந்து கொண்டனர்.  திருவை யாறு மனிதச்சங்கிலியில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா தலைமை வகித்தார்.  அதிராம்பட்டினம் பேருந்து நிலையம், கிழக்கு கடற் கரைச்சாலை தொடங்கி மல்லிப்பட்டி னம் செல்லும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரையிலான சாலையில் பிரம் மாண்ட மனித சங்கிலி போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

சீர்காழி

சீர்காழியில் நடைபெற்ற மனிதசங்கி லியில் மனிதநேய மக்கள் கட்சி, இந்தி யன் யூனியன் முஸ்லிம் லீக், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி கள், இஸ்லாமிய அமைப்புகள், பொது மக்கள் கலந்து கொண்டனர். 

மன்னார்குடி

கூத்தாநல்லூரில் ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு-மக்கள் ஒற்றுமை மேடை இணைந்து நடத்திய மனித சங்கிலி இயக்கத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நா.பால சுப்பிரமணியன், எம்.கலைமணி, மாவட்டக் குழு உறுப்பினர் டி.முருகை யன், ஒன்றியச் செயலாளர் எம்.திரு ஞானம், ஒன்றியக் குழு உறுப்பினர் கே.டி.எம்.நூர்முகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மனிதச் சங்கிலியில் சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்), மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம், இந்திய தேசிய காங்கிரஸ், வெல்பர் பார்டி, வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.











 

;