வியாழன், ஜனவரி 21, 2021

tamilnadu

கோடை கால பயிற்சி முகாம்

புதுக்கோட்டை, ஏப்.30-புதுக்கோட்டை மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாம் விளையாட்டுத் துறையின் சார்பில் 02.05.2019 முதல் 22.05.2019 முடிய மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதில் மாணவ, மாணவியர்களுக்கு தடகளம், கூடைப்பந்து, கையுந்துபந்து, வளைகோல்பந்து போட்டிகளும் மாணவர்களுக்கு மட்டும் கால்பந்து போட்டியும் நடத்தப்படவுள்ளது. மேலும் பாரதியார் தின மற்றும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.விருப்பமுள்ள விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்களது பெயரினை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் பதிவு செய்து கொள்வதுடன் 02.05.2019 அன்று காலை 6 மணிக்கு மாவட்ட விளையாட்டரங்கத்திற்கு வருகை தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;