tamilnadu

img

பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜன.25- காஞ்சிபுரம் மாவட்டம் சால வாக்கம் அருகே கலியம்பேட்டை கிராமத்தில் சமூக விரோதி களால் பெரியார் சிலை சேதப் படுத்தப்பட்டது. இந்த செயலை கண்டித்து, தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பெரியார் பெருந்தொண்டர் அரு. நல்ல தம்பி தலைமை வகித்தார். திரா விட முன்னேற்றக் கழக தலை மைக் கழக பேச்சாளர் அப்துல் மஜீத், தமிழக மக்கள் புரட்சி கழ கப் பொறுப்பாளர் ஆறு.நீலகண் டன், திராவிடர் கழக பொறுப்பா ளர்கள் நீலகண்டன், வை. சிதம்பரம், திராவிடர் விடுதலைக் கழகப் பொறுப்பாளர்கள் சித. திருவேங்கடம், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி வ.ராஜமாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்.எஸ் வேலுச்சாமி, வீ.கருப் பையா, காங்கிரஸ் கட்சி சேக் இப்ராம்ஷா, அறநெறி மக்கள் கட்சி ஆயர் ஜேம்ஸ், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

கும்பகோணம்

கும்பகோணத்தில் திக, திமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக நகர செயலாளர் கௌதமன் தலைமை ஏற்றார். திமுக மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் நகரச் செயலாளர் தமிழழகன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சின்னை. பாண்டி யன், நகர செயலாளர் செந்தில் குமார், சிபிஐ நகர செயலாளர் மதியழகன் விசிக மண்டல செய லாளர் விவேகானந்தன் வழக்கறி ஞர் பாலா மதிமுக கேபிள் செந்தில் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப் பாட்டம் செய்தனர்.
 

;