tamilnadu

img

கோவை பெரியார் சிலை அவமதிப்பு: 2 பேர் மீது குண்டர் சட்டம் 

கோவையில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
கோவையை அடுத்த வெள்ளலூரில் தந்தை பெரியாரின் உருவச் சிலை உள்ளது. இந்த சிலையை கடந்த 8-ந் தேதி இரவு அடையாளம் தெரியாத நபர்கள் செருப்பு மாலை அணிந்தும் தலை பகுதியில் குங்குமத்தை தூவி அவமதித்தனர். 
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பெரியார் சிலைக்கு அவமதிப்பு செய்தது இந்து முன்னணியை சேர்ந்த அருண் கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். இந்நிலையில் தற்போது அவர்கள் இருவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.