இந்திய சிறுபான்மை மற்றும் தமிழர்களுக்கு எதிரான குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேட்டை கொண்டு வரும் பாஜக அரசை எதிர்த்து முஸ்லீம் அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் செவ்வாயன்று மன்னார்குடி பெரியார் சிலை எதிரே நடைபெற்றது. சிபிஎம் நகரச் செயலாளர் எஸ்.ஆறுமுகம், சிபிஐ ஆர்.ஜி.ரெத்தினக்குமார், மதிமுக மாவட்டச் செயலாளர் பி.பாலச்சந்திரன் உள்ளிட்ட மதச்சார்பற்ற இயக்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.