திருச்சிராப்பள்ளி, பிப்.19- மின் வாரியத்தில் நீண்ட நாட்களாக பணியாற்றுகிற ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்தரப்படுத்த வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்க ளுக்கு தினக்கூலி ரூ.380 வழங்க வேண்டும். விபத்துகளில் உயிரிழக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்க வேண் டும். மின்துறை அமைச்சர் அளித்த வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் மன்னார்புரத்தில் உள்ள மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலு வலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட துணைச் செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடிய புறநகர் மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம், மாநில துணைத் தலைவர் பஷீர் ஆகியோர் பேசினர். கிழக்கு கோட்டச் செயலாளர் நாகராஜன் நன்றி கூறினார்.