tamilnadu

img

நெய்தல் கோடை விழா

நாகப்பட்டினம், ஜூன் 23- நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் ‘நெய்தல் கோடை விழா வெள்ளிக்கிழமை மாலை ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் தலைமை வகித்துத் துவக்கி வைத்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் முன்னிலை வகித்தார். விழாவில் கலைமாமணி டாக்டர் பத்மாசுப்பிரமணியனின் பரதநாட்டிய நிகழ்ச்சி மற்றும் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோடை விழாவையொட்டி, மணற்சிற்பம், உணவு அரங்குகள், வணிக அரங்குகள், கண்காட்சிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்தன.