வியாழன், மார்ச் 4, 2021

tamilnadu

கொள்ளிடம்,சீர்காழி மற்றும் திருநெல்வேலி முக்கிய செய்திகள்

சரஸ்வதி மெட்ரிக் பள்ளி சாதனை

கொள்ளிடம், மே 3-நாகை மாவட்டம் கொள்ளிடம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதலாவதாக சக்தி அபிநயா என்ற மாணவி 481 மதிப்பெண்களும், இரண்டாவதாக பிரியங்கா 480 மதிப்பெண்களும், மூன்றாவதாக கௌசிகா 476 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சமுக அறிவியல் பாடத்தில் நான்கு மாணவர்கள் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 8 மாணவர்கள் 470 மதிப்பெண் வீதமும், 19 மாணவர்கள் 450 மதிப்பெண் வீதமும், 48 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை தாளாளர், பள்ளி நிறுவனர், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பரிசு வழங்கி பாராட்டினர்.


மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

சீர்காழி, மே 3-நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். வாகனத்தை ஓட்டி வந்த சீர்காழி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த அருள்(24) மற்றும் திருவெண்காடு அன்னப்பன்பேட்டையைச் சேர்ந்த சிங்காரவேல்(36) ஆகியோரிடம் விசாரித்தனர். இதில் புதுச்சேரியில் இருந்து ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 239 குவார்ட்டர், பிராந்தி பாட்டில்களை கொள்ளிடம் அருகே அளக்குடியில் வைத்து விற்பனை செய்வதற்கு கடத்திச் செல்வது தெரிந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


பொறியியல் படிப்பிற்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடக்கம்

திருநெல்வேலி, மே 3-பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு திருநெல்வேலியில் 2 இடங்களில் தொடங்கியது.தமிழ்நாட்டில் பொறியியல் கல்விக்கான சேர்க்கை கடந்த ஆண்டு இணையவழியில் நடத்தப்பட்டது. நிகழாண்டும் இணையவழியில் விண்ணப்பப் பதிவு மற்றும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. நிகழாண்டு திருநெல்வேலி மாவட்ட மாணவர்களுக்காக திருநெல்வேலி அரசுப் பொறியியல் கல்லூரி மகளிர் விடுதி, திருநெல்வேலி காந்திநகர் ராணி அண்ணா மகளிர் கல்லூரி ஆகிய இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்கத் தேவையான விவரங்கள்: விண்ணப்பதாரரின் பெயர், மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண், வகுப்பு/சாதி தகவல்கள், சிறப்பு இட ஒதுக்கீடு வேண்டுதல், முன்னாள் ராணுவ வீரர் மகன்/மகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், பதிவுக் கட்டணத்தை இணையதளம் மூலமாக செலுத்துவதற்கான விவரம்-(கடன் அட்டை / பற்று அட்டை / ஆன்லைன் வங்கிக் கணக்கு, வரைவு காசோலை செலுத்துவோர் பொறியியல் சேர்க்கை உதவி மையத்திற்கு நேரில் சென்று செலுத்தலாம்). ஆதார் எண் (விருப்பம் இருப்பின்), பெற்றோரின் ஆண்டு வருமானம், பள்ளித் தகவல்கள் (8 முதல் 12 ஆம் வகுப்பு வரை), 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், உதவித்தொகை தேவைப்பட்டால் அதன் விவரங்கள் (முதல் பட்டதாரி கல்விக் கட்டண சலுகை, உயர் கல்வி உதவித்தொகை, ஏ.ஐ.சி.டி.இ. கல்விக் கட்டண விலக்கு) ஆகியன.விண்ணப்பிக்கும் முறை: றறற.வநேயடிடேiநே.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை மாணவர்கள் எளிதாக பதிவுசெய்ய பல படிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

;