tamilnadu

img

குடியுரிமை மசோதாவுக்கு எதிராக பிரச்சாரம்

குடவாசல், ஜன.27- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றி யத்தில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக பிரச்சார பயணம், உறுதிமொழி ஏற்பு போராட்டம் நான்கு மையங்களில் நடை பெற்றது.  சிபிஎம் ஒன்றியச் செயலாளர் டி.வீர பாண்டியன் தலைமையில் துவங்கிய பிரச்சார பயணம் நன்னிலம் ஒன்றியம் கொல்லு மாங்குடி, கொல்லாபுரம்,பேரளம், பூந்தோட்டம் ஆகிய நான்கு மையங்களில் போராட்டம் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் தியாகு.ரஜினிகாந்த, ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் எஸ்.துரைசாமி, கே. எம்.லிங்கம், ஆர்.சுந்தரமூர்த்தி, ஜெ.மனோக ரன், சீனி.ராஜேந்திரன், எம்.ராமமூர்த்தி, டி.பி. ராஜா, ஹாதி, மாவட்ட கவுன்சிலர் ஐ.முகமது உதுமான், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.எம்.சலாவுதின், ஒன்றிய தலைவர் வரத. வசந்தபாலன், மாவட்டக்குழு உறுப்பினர் சரவண.சதிஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலை யம் அருகே கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆர்.லட்சுமி தலைமையில் உறுதிமொழி ஏற்பு போராட்டம் நடைபெற்றது. ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் டி.ஜி.சேகர் கே.ராம தாஸ் மற்றும் வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பி.குமரேசன், தலைவர் பகத்சிங், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் ஜெக தீஷ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மன்னார்குடி

கட்சி சார்பில் முத்துப்பேட்டையில் ஆசாத் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கே. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பி னர் கே.வி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. தமிழ்மணி ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் பற்றி முன்னுரையாற்றினார்.  ஒன்றிய செயலாளர் கே. பாலசுப்பிரமணி யன் உறுதிமொழியை படிக்க அனைவரும் உறுதிமொழியேற்றனர். நகர செயலாளர் சி. செல்லதுரை, ஒன்றிய குழு உறுப்பினர்கள் உப்பூர் ராஜேந்திரன், வீரமணி, வீரசேகரன், கிளை செயலாளர் காளிமுத்து கலந்து கொண்டனர்.

பூதலூர்

மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, தஞ்சை பூதலூர் 4 ரோட்டில் நடை பெற்றது. கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பி னர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி அய்யனா புரம் முருகேசன், மாதர் சங்க மாவட்ட செய லாளர் எஸ்.தமிழ்செல்வி உள்ளிட்டோர்.  சிபிஎம் ஒன்றிய செயலாளர் சி.பாஸ்கர், கே.மருதமுத்து, இ.முகமது சுல்தான், ஏ.ரமேஷ், கே.ராஜகோபால், எல்.ராஜாங்கம், கே.பழனிச்சாமி, சித்திரவேல், விஜயகுமார், சரவணன், அஞ்சலி தேவி, மலர், வசந்தா,  பாத்திமாபீவி, அந்தோணிசாமி, தட்சிணா மூர்த்தி, பாலசுப்ரமணியன், பூதலூர் முஸ்லிம் ஜமாத் இமாம் ஷேக் மைதீன், செயலாளர் ஷேக் அலாவுதீன், ராமகிருஷ்ணன், வில்லி யம், ராஜூ, திமுக சுபா கலந்து கொண்டனர். திருவோணம் ஒன்றியம், வடக்குக் கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் அரசியல் அமைப்புச் சட்டத்தில் மதச் சார்பின்மையை பேணிப் பாதுகாப்போம் என்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.  நிகழ்ச்சிக்கு வாலிபர் சங்க கிளைத் தலைவர் பி.ராஜ்குமார் தலைமை வகித்தார். சங்க மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை.ஏசுராஜா முன்னிலை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் மோரிஸ் அண்ணாதுரை கொடியேற்றி வைத்தார். கிளைச் செயலா ளர் எஸ்.நல்லதம்பி, பொருளாளர் மகேஷ், துணைத் தலைவர்கள் எஸ்.சிவா, எம்.வீர பிரதாப், துணைச் செயலாளர்கள் கே. ராகவன், ஆர்.ஸ்டாலின் மற்றும் ராஜாங்கம், ராஜமுருகன், கலந்து கொண்டனர்.