தஞ்சாவூர் மாவட்டம் நாடியம் ஊராட்சியில் மத்திய அரசின் பிட் இந்தியா திட்டத்தின் கீழ் சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியை நாடியம் ஊராட்சி மன்றத் தலைவர் நா.பிரேம் செல்வன் தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கை.கோவிந்தராஜன் (வ.ஊ), ரமேஷ் (கி.ஊ) ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.