tamilnadu

img

பரணி பார்க் பள்ளி அபார சாதனை

கரூர், ஏப்.29- பரணி பார்க் பள்ளி மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளனர். பி.வைபவி- 493, பி.பூர்ண ஸ்ரீ மற்றும் கே.பி.தரணிகா- 490, எஸ்.காயத்ரி மற்றும் ஆர்.கே.சௌமியா- 488 ஆகியோர் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் 470 மதிப்பெண்களுக்கு மேல் 40 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 74 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 146 மாணவர்களும் பெற்றுள்ளனர். அறிவியலில் 4 மாணவர்களும், சமூக அறிவியலில் 3 மாணவர்களும், மொத்தம் 7 மாணவர்கள் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்துள்ள மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பரணிபார்க் கல்விக்குழுமத்தின் தாளாளர் எஸ்.மோகனரெங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தார். சாதனை படைத்த மாணவர்களையும், அவர்களின் சாதனைக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பரணிபார்க் கல்விக்குழுமத்தின் முதன்மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்ரமணியன், நிர்வாக அலுவலர் எம்.சுரேஷ், பள்ளி முதல்வர் கே.சேகர், துணை முதல்வர்கள் எம்.முத்துக்குமரன், ஜி.நவீன்குமார், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

;