தஞ்சாவூர், ஜன.10- நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்த லில், தஞ்சை மாவட்டத்தில், 28 மாவட்ட கவுன்சிலர் வார்டு களில், 22 இடங்களை திமுக வும் 6 இடங்களை அதிமுக வும் கைப்பற்றியது. இந்நிலையில் 15 வது வார்டில் திமுக சார்பில் பொன்னுசாமியும், அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்தி லிங்கத்தின் உறவினரான வினுபாலன் உள்ளிட்ட 10 வேட்பாளர்கள் போட்டியிட்ட னர். இந்த வார்டில் மொத்தம் 62,313 வாக்காளர்கள் உள்ள நிலையில், 39,158 வாக்குகள் மட்டுமே பதி வாகின. இதில் 2,680 செல்லாத வாக்குகளாக பதி வாகி இருந்தன. இந்நிலையில் தி.மு.க., வேட்பாளர் பொன்னுசாமி 12,554 வாக்குகளும், அ.தி.மு.க., வேட்பாளர் வினுபா லன் 12,753 வாக்குகளும் பெற்று இருந்தனர். 199 வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் வினு பாலன் வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் பிரபா கரன் அறிவித்தார். ஆனால், செல்லாத வாக்குகளையும் சேர்த்து வினுபாலனை வெற்றி பெற செய்ததாகக் கூறி, தி.மு.க., வேட்பாளர் பொன்னுசாமி உள்ளிட்டோர் தேர்தல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். அதன் பின்னர் நள்ளிர வில் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட தாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வினுபா லன் வெற்றியை எதிர்த்தும், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனவும் தி.மு.க., வேட்பாளர் பொன்னுசாமி சார்பில், தஞ்சை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், தி.மு.க., மாவட்ட வழக்கறிஞர் பிரி வைச் சேர்ந்த சண்முக சுந்தரம் என்பவர் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதி பதி சிவஞானம், அ.தி.மு.க., வேட்பாளர் வினுபாலன், ஜன.11 ஆம் தேதி நடைபெ றும் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவரை தேர்வு செய்யும், மறைமுக தேர்தலில் வாக்க ளிக்க தடை விதித்து உத்தர விட்டார். மீண்டும் இம்மனு மீதான விசாரணையை ஜன.20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.