tamilnadu

img

சேலம்-சென்னை எட்டுவழிச் சாலையை அனுமதிக்கமாட்டோம்: கே.பாலகிருஷ்ணன் உறுதி

தருமபுரி, ஏப்.7-

சேலம்-சென்னை எட்டுவழிச்சாலையை அனுமதிக்க மாட்டோம் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக்குழு அலு வலகத்தில் ஞாயிறன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சேலம்- சென்னை வரையிலான ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் எட்டு வழிச்சாலை அமைப்பதற்கு நீதிமன்றத்தில் வழக்கு உள்ளிட்ட பலகட்ட போராட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தால் 2 ஆயிரம் ஹெக்டேர் நிலம் பாதிக்கப்படுகிறது. 190க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் பாதிக்கப்படுகின்றன. வன நிலங்கள், மக்கள் குடியிருப்புகள் ஏராளமானவை பாதிக்கப்படுகிற சூழலில் விவசாயிகள், விவசாய சங்கங்கள் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளனர். இந்த வழக்கில் தீர்ப்பு வர இருக்கிறது. இந்த தீர்ப்பில் எட்டுவழிச்சாலைக்கு அனுமதி மறுக்கவேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. ஒருவேளை தீர்ப்பு விவசாயிகளுக்கு எதிராக வந்தால் நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நாங்கள் போராடுவோம் என கே.பால கிருஷ்ணன் தெரிவித்தார்.வன்முறைக்கு தயாராகும் பாமகமத்திய, மாநில அரசுகளை பயன்படுத்தி பாமக வன்முறைக்கு தயாராகி வருகிறது. ஏனெனில், சமீபத்தில் அன்புமணியின் தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்குச் சாவடியில் நாம் மட்டுமே இருப்போம், வாக்குச்சாவடியை கைப்பற்றுவோம் என சொல்கிறார். தற்போது இவர் மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆகவே, தேர்தல் ஆணையம் உடனடியாக வழக்கு பதிந்து அவரை கைதுசெய்ய வேண்டாமா என கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.இச்சந்திப்பின்போது மாவட்டச் செய லாளர் ஏ.குமார், மாவட்டச் செயற்குழுஉறுப்பினர் வே.விசுவநாதன், நல்லம்பள்ளி ஒன்றியச் செயலாளர் கே.குப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.