tamilnadu

img

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிடுக மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

தருமபுரி, நவ.19- ஆவின் நிறுவனம் பால் கொள் முதல் விலையை உயர்த்தி வழங் கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரி ஒன்றியத் தில் பல்வேறு இடங்களில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆவின் நிறுவனம் பால் கொள் முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் பால் பட்டுவாடா பாக்கி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண் டும். 60 வயது பூர்த்தியடைந்த முதி யோருக்கு மாதம் ரூ.3  ஆயிரம் ஓய்வூ தியம் வழங்க வேண்டும். சனத் குமார் நதியை தூர்வார வேண்டும். காவிரி ஆற்றின் உபரிநீரை மாவட் டத்தில் உள்ள அனைத்து ஏரிக ளுக்கும் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை  வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் தரும புரி மாவட்டம் முழுவதும் 100 ஊராட் சிகளில் நவம்பர் 16 முதல் 21ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு இயக் கம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடை பெற்று வருகிறது.

 இதன்ஒருபகுதியாக, தருமபுரி மாவட்டத்தில் இலக்கியம் பட்டி, செம்மாண்டகுப்பம், குப்பூர், கொண்டம்பட்டி, நத்தம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட் டங்களில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.முத்து, டி.எஸ்.ராமச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் கே. பூபதி, ஒன்றிய செயலாளர் என்.கந்த சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். மேலும், சின்னம்பள்ளி பகுதி குழுவின் சார்பில் கலப்பம்பாடி, கோப்பளூர், சின்னம்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் மக்கள் சந்திப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், பகு திக்குழு செயலாளர் சக்திவேல் ஆகி யோர் சிறப்புரையாற்றினர்.  

பென்னாகரம் பகுதி குழுவின் சார்பில் கூத்தாப்பாடி, மாங்கரை, சத்தியநாதபுரம், செங்கனூர் உள் ளிட்ட ஊராட்சி மன்ற அலுவலகங் கள் முன்பு மக்கள் சந்திப்பு ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன், நகர செயலாளர் எஸ்.வெள் ளியங்கிரி, பகுதிக்குழு செயலா ளர் அன்பு, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் ரவி, சிவா, பி.எம்.முருகேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டங்களில் பகுதிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர். நிறை வாக அந்தந்த ஊராட்சி மன்ற தலை வரிடம் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.

;