தருமபுரி, ஜன.19- கோவை, ஈரோடு, சேலம், தரும புரி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங் கப்பட்டது. தருமபுரி மாவட்டம், காரிமங்க லம் வட்டத்திற்குட்பட்ட கொர கோடஅள்ளி கிராமத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். இம்முகா மிற்கு மாவட்ட ஆட்சியர் எஸ். மலர்விழி தலைமை வகித்தார். மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் ஐந்து வயதிற் குட்பட்ட 1,66,528 குழந்தை களுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அது போலவே இந்த ஆண்டு 1,47,869 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சேலம்
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள 67 மலைக்கிராமங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பய ணிகள் அதிகளவில் உலாவும் பகு தியான அண்ணா பூங்கா அரு கில் நடைபெற்ற முகாமை ஏற்காடு தொகுதி எம்எல்ஏ சித்ரா தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஏற் காடு டவுன் ஊராட்சி மன்ற தலை வர் சிவசக்தி ரவிச்சந்திரன் கலந்து கொண்டார். மகுடஞ்சாவடி பேருந்து நிறுத்தம் அருகில் நடை பெற்ற முகாமினை சங்ககிரி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.ராஜா துவக்கி வைத்தார். இதில் மகுடஞ் சாவடி ஒன்றிய குழு தலைவர் ரா. லலிதா, துணைத்தலைவர் நா. சரஸ்வதி மற்றும் வட்டார மருத் துவ அலுவலர் முத்துசாமி உள் ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.வீரபாண்டி வட்டாரத்திற்குட் பட்ட ஆட்டையாம்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகில் நடை பெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை வீர பாண்டி எம்எல்ஏ பி.மனோன் மணி துவக்கி வைத்தார். இதில் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி வேல், வீரபாண்டி ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.வருதராஜ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் வீரபாண்டி வட்டாரத் தில் 176 மையங்களில் 15,919 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதில் 600 மருத்துவ மற்றும் ஊட் டச்சத்து பணியாளர்கள் சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட் டனர். விடுபட்ட குழந்தைகளுக்கு 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் சொட்டு மருநது வழங்கப்படும் என மருத்துவ அலுவலர் தெரிவித்தார்.
நீலகிரி
நீலகிரி மாவட்டம், கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணாநாகரில் நடைபெற்ற வந்த முகாமை மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார். இதில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் மரு.பாலுசாமி உட்பட ஏராளமான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு
இதேபோல், ஈரோடு மாவட் டம், கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் நடை பெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை பள்ளிக்கல்விதுறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகா தார நிலையங்கள், துணை சுகா தார நிலையங்கள், ஊட்டசத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சுங்கச்சாவடி மற் றும் 26 நடமாடும் சொட்டு மருந்து முகாம்களிலும், 23 போக்குவரத்து முகாம்களிலும் போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட்டது. இப்பணிக்காக பல்வேறு துறைகளைச் சார்ந்த 4,616 பணியாளர்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் ஈடு பட்டிருந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் சுமார் 2.27 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நி லையில் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைக் கப்பட்ட முகாமினை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடு மலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதேபோல், அவிநாசி பகுதி களில் ஞாயிறன்று போலியோ சொட்டு மருந்து மருத்துவ முகாம் நடைபெற்றது. இதேபோல், அவிநாசி ஒன்றிய பகுதிகளில் சேவூர், நம்பியாம் பாளையம், துலுக்கமுத்தூர், அவி நாசி, திருமுருகன்பூண்டி உள் ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்களில் 108 போலியோ சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, சுமார் 3,600 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.