tamilnadu

img

குட்கா ஊழல் பேர்வழியோடு மோடி, ராமதாஸ் கூட்டணி

ஓசூர், மார்ச் 31-


திமுக கூட்டணி சார்பில் ஓசூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.செல்லகுமார் மற்றும் ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் எஸ்.ஏ.சத்யாஆகியோரை ஆதரித்து திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்பேசியதாவது: ஜெயலலிதாவால் பதவி பறிக்கப்பட்ட கே.பி.முனுசாமிக்குஓபிஎஸ், இபிஎஸ் சீட் கொடுத்திருக் கிறார்கள். திருவண்ணாமலையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, திருப்பூரில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்த், பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் சிவபதி - இவர்கள் எல்லோரும் ஊழல் செய்தார்கள் என்பதற்காக ஜெயலலிதாவால் பதவி பறிக்கப் பட்டவர்கள். அதிலும் ஒரு சிலர் துப்பாக்கி எடுத்து சிலரை சுட முயற்சித்தார்கள் என்பதற்காக அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்கள். ஓசூர் பகுதி மட்டுமல்லாமல் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங் களில் அரசு மருத்துவமனைகளில் தகுதியற்ற கெட்டுப்போன ரத்தத்தை செலுத்தியதால், 15-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் இறந்துபோயிருக்கின்றார்கள். இதுவே இந்த அவல ஆட்சிக்கு உதாரணம். இன்றைக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருக்கக்கூடிய விஜயபாஸ்கர். அவர் ஒரு மருத்து வர். அமைச்சராக இருப்பதற்கும் லாயக்கில்லை, மருத்துவராக இருப்பதற்கும் லாயக்கில்லை.தருமபுரி அரசு மருத்துவ மனையில் பிறந்த சிசுக்கள், பிறந்ததும் இறந்து போகும் கொடுமையும் நடக்கிறது. இதுகுறித்து ஆதாரங் களோடு பத்திரிகைகளில் செய்தி வந்து கொண்டிருக்கின்றது. 2014 ஆம் ஆண்டு மருத்துவமனையில் இன்குபெட்டர் இல்லாத கார ணத்தினால், இரண்டு நாட்களில் 11 பிறந்த குழந்தைகள் இறந்தன. தற்போது மனித உரிமை ஆணையம் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கத் துவங்கியுள்ளது. அதை விசாரிக்கும் பொழுது இரண்டு வாரத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை மருத்துவ இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. இதன்பிறகும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய விஜயபாஸ்கர் அந்தப் பதவியில் நீடிக்கலாமா? அவருக்கு ஏற்கனவே குட்கா விற்பதற்கே நேரம் கிடைக்கவில்லை. இந்த மருத்துவமனைகளைச் சென்று அவர் எங்கே பார்க்கப் போகின்றார்.


அந்த குட்கா ஊழல் பேர்வழியோடு தான் பாஜகவும், பா.ம.க-வும் கூட்டணி சேர்ந்துள்ளது ஜெயலலிதாவை விட எடப்பாடிபழனிசாமி ஆட்சியில் ஊழல் அதிகமாக இருக்கின்றது. இந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது தமிழ்நாடு தான் முதலிடத்தில் இருக்கின்றது. 2011 ஜெயலலிதா அவர்கள் முதல்வ ரானதும் ஊழல் பெருக்கெடுத்தது, ஜெயலலிதாவை தொடர்ந்து ஓ.பி.எஸ் வந்ததும் ஊழல் வளர்ந்தது, எடப்பாடி ஆட்சியில் தற்பொழுதுபெரிய அளவில் அதிகரித்துள்ளது என்று பாமக தலைவர்களில் ஒருவ ரான அன்புமணியும் அவரது அப்பா ராமதாசும் அறிக்கை விட்டனர். ஆளுநரிடம் மனு அளித்தனர். அவர்கள் தான் இப்போது அதே ஊழல் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளனர். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், இரண்டு நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநில அமைச்சர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை. வெள்ளிக்கிழமை நள்ளிரவு பொருளாளர் துரைமுருகனின் காட்பாடி இல்லத்தில் ரெய்டு நடந்துள்ளது. இன்றைக்கு அதிமுக பாஜக கூட்டணிதோல்வியின் விளிம்பில் இருப்பதால் வருமான வரித்துறையை ஏவுகிறார்கள். இவற்றையெல்லாம் பார்த்து பயப்படுகின்ற கட்சிதிமுக அல்ல. மிசாவைப் பார்த்த வர்கள், தடாவைப் பார்த்தவர்கள், எத்தனை நாளைக்கு இவர்கள் அச்சுறுத்துவார்கள். அதையும் பார்த்துவிடலாம்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

;