கிருஷ்ணகிரி, ஏப்.16- ஓசூரில் உள்ள குணம் பல்நோக்கு மருத்துவ மனை தொடங்கப்பட்டு ஐந்தாண்டுகள் நிறைவடைந்தது ஆறாம் ஆண்டு துவக்க நாளில் மருத்துவமனை வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை தொழிலதிபர் சீனிவாசன் துவக்கி வைத் தார். இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் ஓசூர் கிளைத் தலைவர் மருத்துவர் தனசேகர் முன்னிலை வகித்தார். குணம் மருத்துவ மனையின் இயக்குநர்களான மருத்துவர்கள் செந்தில், பிரதீப் குமார், கார்த்திக் பாண்டியன், பிரபுதேவ், விஜி சுப்பிரமணியம், வனிதா பிரதீப் குமர்,, கவிதா செந்தில், சிறீ சுதா, விஜி, ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமிற்கு வந்தவர்களை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். இந்த மருத்துவ முகாமில் 500 பேருக்கு இலவச பரிசோதனையும், தேவைப் பட்டவர்களுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டது. ரத்தப் பரிசோதனை, ரத்தஅழுத்தம், சக்கரை அளவு பரிசோதனை, சிடி ஸ்கேன், கண் பரிசோதனை, நரம்பு, எலும்பு, இதயப் பரிசோதனை உட்பட, சிலருக்கு இலவச அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டது. இரண்டு தொழிற்சாலை தொழிலாளர்கள் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.