tamilnadu

img

ஒகேனக்கல் குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்ககோரி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

தருமபுரி, நவ.21- ஒகேனக்கல் குடிநீர் தட்டுபா டின்றி வழங்கவேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் சனியன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி அதியமான் கட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி யின் ஒன்றியசெயலாளர் கே. குப்புசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.இளம்பரிதி, ஒன்றிய குழு உறுப் பினர்கள் எஸ்.எஸ்.சின்னராஜ், இ.பி.பெருமாள், கே.முனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.  இதில், நல்லம்பள்ளி ஒன்றியத் தில் புறம்போக்கு இடங்களில் வீடு கட்டி குடியிருந்து வருபவர்களுக்கு மனைபட்டா வழங்கிட வேண்டும். அனுபவத்தில் உள்ள அரசு புறம் போக்கு நிலங்களை வகை மற்றம் செய்து நிலப்பட்டா வழங்க வேண் டும். தடங்கம் கிராமத்தில் தரும புரி நகராட்சி குப்பை கொட்டு வதை தடுத்து நிறுத்தி, இருக்கும் குப்பைகளை அகற்றிட வேண்டும். சிப்காட் தொழிற்பேட்டை பணி களை துவங்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும். நல்லம்பள்ளி பேருந்து நிலை யத்தை செயல்படுத்த வேண்டும். மிட்டாரெட்டிஅள்ளி - கோம்பை மலைப்பாதை அமைக்க வேண்டும். பாளையம்புதூர் ஜெகநாதன் கோம்பை அனைகட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.