tamilnadu

மாணவர்களை ஈர்க்கும் புத்தகத் திருவிழா

தருமபுரி, ஆக. 4- தருமபுரியில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவிற்கு மாவட்டம் முழுவதிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். தகடூர் புத்தக பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து தருமபுரி மது ராபாய் சுந்தரராஜாராவ் திருமண மண் டபத்தில் புத்தகத் திருவிழா ஜூலை 26 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த புத்தகத் திருவிழாவை மாணவர்களுக்கு கொண்டு செல்லும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. மேலும், மாண வர்களுக்கு வாசிப்பு திறனை மேம்படுத்த ஜூலை 27 ஆம் தேதியன்று மாவட்டம் முழுவதும் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற் றது. இதில் 3 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்று சிறப்பித்தனர். மேலும், புத்தகத் திருவிழாவின் போது தினசரி மாலை 5 மணிக்கு  அறிவுசார் கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகிறது. தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. காலை 11 மணிக்கு துவங்கி இரவு 9 மணிவரை நடைபெறும் புத்தக திருவிழாவில் 53 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தங் கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப் பட்டுள்ளன. குறிப்பாக, மாணவர்களுக்கு தேவையான அனைத்து வகையான அறிவுசார் புத்தகங்கள் வைக்கப்பட் டுள்ளது.  புத்தகத் திருவிழாவுக்கு பள்ளி, கல்லூரி களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் வந்து தனக்கு தேவையான புத்தகத்தை ஆர்வமுடன் வாங்கி செல்கின் றனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு புத்தகத் திருவிழா மாணவர்களின் மத்தி யில் மிகப்பெரும் வரவேற்பையும், கவ னத்தையும் ஈர்த்துள்ளது.