districts

img

புதுக்கோட்டை புத்தக திருவிழாவில் மாணவர்களை ஈர்க்கும் அறிவியல் செயல்பாடுகள்

புதுக்கோட்டை, ஜூலை 30 -  5 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் பள்ளி, கல்லூரி மாண வர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு விதமான அறிவியல் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாக மும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும்  இணைந்து 5 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை புதுக்கோட்டை நகர் மன்றத்தில் நடத்தி வருகிறது. இந்நிகழ்வில் மாலை நேரங்களில் தமிழ கத்தின் மிக முக்கியமான எழுத்தா ளர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள் உரையாற்றி வருகின்றனர். புத்தகத் திருவிழாவின் ஒரு பகுதி யாக, காலை நேரங்களில் மாணவர் களை ஈர்க்கும் வகையில் பல்வேறு அறிவியல் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில், அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர்கள் பங்கேற்று வருகின்றனர். அறிவியல் செயல்பாடுகளில் மாணவர்களே நேரடி யாக ஈடுபடுவதால், அவர்கள் மகிழ்ச்சி யுடன் பங்கேற்று வருகின்றனர். எளிமை யான அறிவியல் விளக்கம், செய்து  பார்த்து கற்றல், மந்திரமா? தந்திரமா?  போன்ற நிகழ்வுகள் நடத்தப்படு கின்றன.   இதனொரு பகுதியாக, புத்தகத் திரு விழாவின் 2-வது நாளான சனிக்கிழமை அன்னவாசல் பகுதிகளிலிருந்து அரசு பள்ளி மாணவர்கள், பொன்னமராவதி லைன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, மேலதானியம் நேரு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்விற்கு லைன்ஸ் பள்ளி  தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். புத்தக ஒருங்கி ணைப்பு குழு உறுப்பினர் அ.மண வாளன் துவக்கி வைத்து பேசினார். அறி வியல் செயல்பாடுகளை தமிழ்நாடு அறி வியல் இயக்கத்தின் மாநிலச் செயலா ளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் செய்து  காட்டி குழந்தைகளோடு உரையாடி னார். 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சி க்கு ஸ்ரீ காமராஜ் கல்வி நிறுவனங்களின் மேலாண்மை அறங்காவலர் குரு.தன சேகரன் தலைமை வகித்தார். தவத்திரு  பொன்னம்பல அடிகளார் சிறப்புரை யாற்றினார். சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், நாகப் பட்டினம் முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, கவிஞர் ஜீவி, தொழிலதிபர் ஆர்.மாரிமுத்து, மேனாள்  நகர்மன்ற துணைத் தலைவர் க.நைனா முகமது, நகர்மன்ற உறுப்பினர் செந் தாமரை பாலு உள்ளிட்டோர் பேசினர்.