tamilnadu

img

டாஸ்மாக் தீபாவளி விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பதா?

மாதர் சங்கம் கடும் கண்டனம்

சென்னை, அக்.23- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழக அரசு இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.385 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில்  மதுபானம் விற்பனை செய்ய வேண்டும் என்ற இலக்கு தீர்மானித்துள்ளதை ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் சிறு, குறு தொழில்கள் நலிவடைந்து வருகிறது. தொழில் நலிவால் பலர் வேலை இழந்து வருகின்றனர். இது, வரும் தீபாவளி சாதாரண ஏழை,  எளிய மக்களின் கொண்டாட்டங்களை கேள்விக்குறியாக்கி யுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளால் இளம் வயதில் உயிரிழக்கும் ஆண்களின் எண்ணிக்கையும், விபத்துகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.இளம் விதவை களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழக அரசுக்கு பெண்களின் வாழ்க்கை குறித்த எந்த கவ லையும் இல்லை. தீபாவளிக்கு இலக்கு வைத்து மதுபானம் விற்பனை செய்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சாதாரண மக்கள் தீபாவளி கொண்டாடுவதற்கு ஏதுவாக ரேசன் கடைகளில் மைதா, எண்ணெய், சர்க்கரை, கடலை மாவு, துணி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க  கோரி ஜனநாயக மாதர் சங்கம் போராட்டம் நடத்தி வரு கிறது. ஆனால் பொது விநியோக முறை கொஞ்சம் கொஞ்ச மாக சீரழிக்கப்பட்டு வருகின்றது. பண்டிகை காலப் பொருட்கள் வழங்காமல் டாஸ்மாக் கடைகளுக்கு இலக்கு வைத்து விற்பனை செய்ய வேண்டும் என அரசு நிர்பந்திப்பதை ஜனநாயக மாதர் சங்கம் வன்மை யாகக் கண்டிக்கிறது.