சென்னை,ஜன.4- ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் அதிமுகவும், திமுகவும் தலா 13 மாவட்ட கவுன்சில்களை வென்றுள்ளன. சிவகங்கையில் இழுபறி நீடிக்கிறது. மதுரை, நீலகிரி, திண்டுக்கல், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், ராமநாதபுரம், திருச்சி மாவட்ட கவுன்சில்களை திமுக கூட்டணி கைப்பற்றுகிறது. கோவை, சேலம், தருமபுரி, கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், நாமக்கல், தேனி, திருப்பூர், தூத்துக்குடி, அரியலூர், விருதுநகர் மாவட்ட கவுன்சில்களை அதிமுக கூட்டணி கைப்பற்றுகிறது. சிவகங்கை மாவட்ட கவுன்சிலுக்கு மட்டும் இழுபறி நீடிக்கிறது.