தஞ்சாவூர், பிப்.23- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி (கிழக்கு) ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் உலக தாய்மொழி நாளை யொட்டி பெற்றோர் ஆசிரியர் கழக கூட்ட மும், பள்ளி மேலாண்மைக் குழு கூட்டமும் நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் த. பழனிவேல் தலைமை வகித்தார். கிரா மப்பகுதி அரசுப் பள்ளியில், தமிழ் வழியில் படித்து மருத்துவரான பேராவூரணியின் பிர பல எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் துரை நீலகண்டன் கலந்து கொண்டு தாய் மொழி வாயிலாக கல்வி கற்பதன் அவசியத்தை எடுத்துரைத்தார். இந்தப் பள்ளியில் 2 ஆண்டுக்கு முன் நான்கு பேர் மட்டுமே தமிழ் வழியில் படித்த நிலை மாறி தற்போது 45 மாணவர்கள் தமிழ் வழியில் படித்து வருகிறார்கள். தமிழ் வழி யில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் சார்பில் பரிசு வழங்கப் பட்டது. பள்ளியின் முன்னாள் மாணவர் செந்தில் பள்ளியின் தரைத் தளத்திற்கு பளிங்குக் கல் பதித்துத் தருவதாக உறுதி யளித்தார். நிகழ்வில் எழுத்தாளர் கே.கான்முகமது, முன்னாள் மாணவர்கள் நீலகண்டன், பெற் றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் மங்கையர்க்கரசி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவி சத்தியபாமா, பொருளாளர் சித. திருவேங்கடம், மெய்ச்சுடர் நா வெங்க டேசன் தலைமை ஆசிரியர் பாலச்சந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். வரும் ஆண்டுகளில் தமிழ் வழியில் படிக்கும் மாண வர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது, பள் ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டித் தர அரசைக் கேட்டுக் கொள்வது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.