தஞ்சாவூர்: கும்பகோணம் அரசுப் போக்குவரத்து கழகத்தின் வழக்குகளுக்கு, பிப்.8 அன்று காலை 10 மணிக்கு தேசிய லோக் அதாலத் நடைபெற உள்ளது. மாநில சட்டப்பணிகள் குழு சார்பில் சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளில் சமரச தீர்வு காண இந்த லோக் அதாலத் நடைபெற உள்ளது. இதில் போக்குவரத்து கழக கும்பகோணம் தொடர்பான மோட்டார் வாகன விபத்து வழக்கு களில் சமரச தீர்வு கண்டு சம்பந்தப்பட்டவர்கள் பயனடையுமாறு மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து கும்பகோணம் மண்டலம் 0435-2403724-26, 9043238312, 8667590214, திருச்சி மண்டலம் 0431-2415551-54, 94878 98057, 98945 91570, காரைக்குடி மண்டலம் 04565-234125-26, 9487898095, புதுக்கோட்டை மண்டலம் 04322-266111, 94878 98065, 9443797248 கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.