tamilnadu

நெல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

 தஞ்சாவூர், மார்ச் 4- தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறை அடுத்த திருப்பூந்துருத்தி மெயின் ரோட்டில், நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வெளி மாவட்ட பதிவெண் கொண்ட லாரி ஒன்று வருவதாக தஞ்சை வருவாய் கோட்டாட்சியர், திருவையாறு வட்டாட்சியர் இளம்மாருதிக்கு தகவல் தெரிவித்தார்.  இத்தகவலின் பேரில் திருவையாறு வட்டாட்சியர் இளம்மாருதி, வருவாய் ஆய்வாளர் இந்துமதி ஆகியோர் விரைந்து சென்று திருப்பூந்துருத்தி மெயின்ரோட்டில் லாரியை மறித்து சோதனை செய்த போது உரிய ஆவணங்கள் இல்லை என்று தெரியவந்தது.  உடனே லாரியை பறிமுதல் செய்து நடுக்காவேரி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். நடுக்காவேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து லாரியை ஓட்டி வந்தது யார், லாரியில் என்ன ரகம் நெல் உள்ளது, நெல்லுக்குரிய ஆவணம் உள்ளதா, லாரி உரிமையாளர் யார், நெல் எங்கிருந்து ஏற்றி வரப்பட்டது, வியாபாரி நெல்லா அல்லது இங்கு உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் போடுவதற்காக ஏற்றி வந்ததா என விசாரணை நடத்தி வருகின்றனர்.