tamilnadu

img

தூத்துக்குடியில் பெர்மிட் இல்லாத லாரி பறிமுதல்

தூத்துக்குடி, ஜூன் 9- தூத்துக்குடியில் உரிய பெர்மிட் இல்லாமல் சரல் ஏற்றிக்கொண்டு வந்த லாரியை தூத்துக்குடி தாசில்தார் மடக்கிப் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்ப டைத்தார். தூத்துக்குடி நகருக்கு ஞாயிறன்று ஒரு லாரி சரல் ஏற்றிக்கொண்டு மிக வேகமாக வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த லாரியை வழிமறித்து தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் சோதித்தபோது அந்த லாரி உரிய பெர்மிட் இல்லாமல் சரல் ஏற்றி வந்ததாக தெரிகிறது. உடனே அந்த லாரியை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் தாசில்தார் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.