தஞ்சாவூர், ஜன.23- பேராவூரணி அருகே பழுதடைந்து, பரா மரிப்பின்றிக் கிடந்த நிழற்குடையை சொந்தச் செலவில் சீரமைத்த இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கொளக்குடி ஊராட்சியில் பனங்குளம் கிராமம் உள்ளது. காலகம் - ஆவுடையார் கோவில் சாலையில் ஏற்கனவே அமைக்கப் பட்ட, இந்த நிழற்குடை கடந்த இரண்டு ஆண்டுகளாக பராமரிப்பின்றி சேத மடைந்த நிலையில் இருந்தது. இந்த நிழற்குடையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, குப்பைக் கூளங்கள் நிறைந்து, பாழடைந்த கட்டிடம் போல் காணப்பட்டது. இதனால் நிழற்குடை பயன்பாடின்றி இருந்தது. இதையடுத்து இப்பகுதி இளைஞர்கள் இதனை சரி செய்ய வேண்டும் என முடி வெடுத்து, கிராம மக்களின் ஒத்துழைப்பைக் கோரினர். தொடர்ந்து கிராம மக்களிடம் தொகை வசூலித்து இளைஞர்களே நிழற் குடையில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி களை கிழித்து அப்புறப்படுத்தி கழுவி சுத்தம் செய்தனர். மேலும், வண்ணப்பூச்சு பூசி அழகுபடுத்தியுள்ளனர். தற்போது புதிய கட்டிடம் போல் காட்சி யளிக்கும் நிழற்குடை அனைவரது கவ னத்தையும் ஈர்த்துள்ளதோடு, சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இளை ஞர்களின் இந்த முயற்சிக்கு பனங்குளம் கிராம மக்கள் மற்றும் பல்வேறு தரப்பி னரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.