tamilnadu

img

குளங்கள் தூர்வாரும் பணி இளைஞர்களுக்கு பாராட்டு

 தஞ்சாவூர், அக்.20- மத்திய அரசின் ஜலசக்தி அபியான்(நிலத்தடி நீர் பாது காப்பு) ஆய்வுக் குழு சனிக்கிழமை ஒட்டங்காடு வந்தது. டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல்கலாம் கிராம வளர்ச்சிக் குழு வால் தூர்வாரி சீரமைக்கப்பட்ட ஒட்டங்காடு புறவரை குளத்தை மத்திய நீர் வழங்கல் மற்றும் சுகாதார துறை அமைச்சக உதவிப் பிரிவு அலுவலர் சுபோத் முட்ஜில் பார்வையிட்டு இளைஞர்கள் மேற்கொண்ட பணிகள் குறித்து கேட்டறிந்து, நேரில் பார்வையிட்டு இளை ஞர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து குளக்கரை யில் தென்னை மரக்கன்று நட்டு வைத்தார்.  பின்னர் ஒட்டங்காடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டி மற்றும் ஒட்டங்காடு பெரிய குளம், தெற்கு ஒட்டங்காடு பிள்ளையார் கோவில் குளம் ஆகியவற்றை பார்வையிட்டார். இந்த நிகழ்வில் பொதுப்பணித்துறை அலுவலர்கள் கருப்பையா, இளஞ்சேரன், மனோகரன், நாராயணசாமி, ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் கோ.செல்வம், சு.சடையப்பன் அலு வலர்கள் சுரேஷ், ராஜேஷ், சண்முகம், முன்னாள் ராணுவ அலுவலர் ஆசிர்வாதம் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் கிராம வளர்ச்சிக் குழுவினர், கிராமத்தினர் கலந்து கொண்டனர்.