tamilnadu

img

பாராட்டு விழா

தஞ்சாவூர், ஜன.19- தஞ்சாவூர் மாவட்டம் முடச்சிக்காடு இளைஞர் நற்பணி மன்றம் (இந்திய அரசின் நேரு யுவகேந்திராவுடன் இணைந்தது) சார் பில் 25 ஆம் ஆண்டு பொங்கல் விழா சனிக் கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மன்றத் தலைவர் பொறியாளர் தினேஷ் தலைமை வகித்தார். கோவை வேளாண் பல்கலைக் கழக ஓய்வு பெற்ற பேரா. பி.சின்னையன் முன்னிலை வகித்தார். செம்மொழி ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் இரா.அகிலன் வர வேற்றார்.  விழாவில், மண்ணின் மைந்தரான விக டன் குழும முதன்மை பொறுப்பாசிரியர் வெ. நீலகண்டனுக்கு “செந்தமிழ் முரசு” என்ற விருது, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌர விக்கப்பட்டது. தமிழ்நாடு மெட்ரிக் மேல் நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் முனை வர் ஜி.ஆர்.ஸ்ரீதர், திருக்குறள் தங்க வேலனார், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், பேராசிரியர் கணேசகுமார், மா.கணநாதன், தொழிலதிபர் புதுகை வி.அன்புச் செல்வம், ஆசிரியர் எம்.அன்புதுரை, டாக்டர் பிர காஷ், பேராவூரணி பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் எஸ்.ஜகுபர்அலி, ஜி.ராஜா, பழ. பழனியப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். விகடன் பொறுப்பாசிரியர் வெ.நீலகண் டன் ஏற்புரையாற்றினார். நிறைவாக வி.பி.நீலகண்டன் நன்றி கூறினார். தொடர்ந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

;