tamilnadu

img

3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்:

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பென்ஸ்காம் கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதலை நடத்தினர். இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

;