இடாநகர்
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசலப் பிரதேசத்தின் திரப் மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் தேசிய மக்கள் கட்சியின் மேற்கு கோன்சா தொகுதி எம்.எல்.ஏ திரோங் அபோ உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.சமீபத்தில் நிறைவு பெற்ற மக்களவைத் தேர்தலுடன் அருணாசலப் பிரதேசத்திற்கும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.மேற்கு கோன்சா பகுதியில் திரோங் அபோ மீண்டும் போட்டியிட்டார்.23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் திரோங் அபோவின் திடீர் மரணம் மாநில அளவில் கடும் அதிர்ச்சி அலையை உருவாகியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு மேகாலயா மாநில முதல் மந்திரி கன்ராட் சங்மா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.