கனோ:
நைஜீரியாவில் பயங்கரவாதி களால் துப்பாக்கி முனையில் 150 பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகத்தினரும், பெற்றோர் களும் புகார் அளித்துள்ளனர். நைஜீரியா நாட்டின் வடக்கில் அமைந்துள்ள கதுனா மாநிலம் தாமிசி மாவட்டத்தில் சிக்குன் பகுதியில் பெத்தேல் பாப்பிஸ்ட் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள விடுதியில் சுமார் 200 பேர் வரை தங்கிப்படித்து வருகிறார்கள். ஜூலை 5 அன்றுஅதிகாலை 2 மணியளவில் துப்பாக்கி யுடன் புகுந்த பயங்கரவாதிகள், 150க்கும்மேற்பட்ட மாணவர்களை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விடுதி நிர்வாகத்தினர் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். பயங்கரவாதி கள் உள்ளே புகுந்ததும், சில மாணவர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. நைஜீரியா நாட்டில் பள்ளி மாணவ, மாணவியர்கள் பயங்கரவாதி களால் கடத்தப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. 2014 ஆம் ஆண்டில் போகோ ஹரம் பயங்கரவாதிகள் 76 மாணவிகளை கடத்திச்சென்றனர்.