திங்கள், செப்டம்பர் 27, 2021

tamilnadu

img

ஓமலூர் தெற்கு ஒன்றியத்தில் சேலம் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் பிரச்சாரம்

சேலம், ஏப்.8-

சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஓமலூர் தெற்கு ஒன்றியத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் போட்டியிடுகிறார். இவர் திங்களன்று சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓமலூர்தெற்கு ஒன்றியத்தின் டால்மியா பகுதிகளில் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசுகையில், மேட்டூர் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தி ஓமலூர் மற்றும்அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய பாசனம் மற்றும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், ஓமலூர் சுற்றியுள்ள கவுண்டம்பட்டி, சாமி நாயக்கன்பட்டி, தாரமங்கலம் கிழக்கு ஒன்றியம், அயோத்தியபட்டினம் ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.இதில், சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள், நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

;