tamilnadu

img

சேலத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் சேலம் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வாக்குறுதி

சேலம், ஏப்.12- சேலம் மாநகரில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வாக்குறுதி அளித்தார். திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராகஎஸ்.ஆர்.பார்த்திபன் போட்டியிடுகிறார். இவர் வெள்ளியன்று சேலம்மாநகரில் 17, 18, 23, 24, 25 ஆகியவார்டு பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் அப்போது பேசுகையில், சேலம் மாநகரில்மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என திமுகதேர்தல் அறிக்கையில்தெரிவித்துள்ளது. இந்த முக்கிய திட்டத்தை நிறைவேற்ற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். நகர்ப்புற மக்களின் மீது அதிகப்படியான வரியை மத்திய பாஜகஅரசும், மாநில அதிமுக அரசுவிதித்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் மீது பல்வேறு விதமான வரிகளை விதித்து மக்களை கசக்கிப் பிழிந்து வருகின்றனர்.


இத்தகைய மத்திய அரசிற்கு தகுந்த பதிலளிக்க வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.மேலும், ஏழை நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், வங்கிக் கடன் உதவி வழங்கப்படும். செவ்வாய்பேட்டை பகுதி வியாபாரிகள்ஜிஎஸ்டி வரி விதிப்பால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளனர். ஆகவே, ஜிஎஸ்டிவரி விதிப்பில் மாற்றம் கொண்டு வந்து வியாபாரிகள் மற்றும் தொழில் துறையினரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும். சேலம்மாநகரத்தின் மிக முக்கிய மாவட்டமாக கருத்தில் கொண்டு அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் ஏற்படுத்தப்படும். எனவேஎனக்கு உதயசூரியன் சின்னத்தில்வாக்களித்து வெற்றிபெற செய் வேண்டும் என கேட்டுக்கொண்டார்.பிரச்சாரத்தின் போது திமுக மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர மேற்கு செயலாளர் எம்.கனகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மோகன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

;