tamilnadu

சேலத்திற்கு நாளை ராகுல் வருகை

சேலம், ஏப்.10-நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏப்.12 ஆம்தேதி சேலத்தில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவேட்பாளரை ஆதரித்துபிரச்சாரம் மேற்கொள்ளஇருக்கிறார். ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின்சார்பில் சேலம் சங்கர் நகர் பகுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில்ராகுல் காந்தி கலந்துகொள்ளும் பொதுக் கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கவேண்டும். திமுக , காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று மத்தியில் நிலையான ஆட்சியை அளிக்கும் எனவும் அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத் தெரிவித்தார்இந்நிகழ்ச்சியில், சேலம்மாநகர் மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ், மாவட்டவர்த்தக பிரிவு செயலாளர்சுப்பிரமணியம், மாவட்ட மகளிஅணி செயலாளர் சாரதாதேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.