tamilnadu

img

ஜனவரி.8 அகில இந்திய வேலைநிறுத்தம் விளக்க கூட்டம்

சேலம், ஜன. 4 - சேலம் உருக்காலை நுழைவா யில் முன்பு அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஜனவரி 8ம்தேதி நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்தை விளக்கி வாயிற் கூட்டம் சனியன்று நடை பெற்றது. தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தக் கூடாது. குறைந்தபட்ச ஊதியத்தை உத்தரவாதப்படுத்த வேண்டும்.பொதுத்துறைகளை தனியார் மயமாக்க கூடாது என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி ஜனவரி 8ஆம் தேதியன்று மத்திய தொழிற்சங்கங் கள் சார்பில் நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.இப்போராட்டத்தை விளக்கி சேலம் உருக்காலை முன்பு விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு சங்க செயலாளர் சுரேஷ்குமார், ஐஎன்டியுசி செயலா ளர் தேவராஜன், எல்பிஎப் செயலா ளர் பெருமாள் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் கோரிக்கைகளை விளக்கி சிஐடியு சண்முகம், எல்பிஎப் அம்மாசியப்பன், ஐஎன்டியுசி இளங்கோவன் ஆகி யோர் விளக்க உரையாற்றி னார். இக்கூட்டத்தில் சேலம் உருக் காலை தொழிலாளர்கள் திரளா னோர் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து 
இதேபோல் சேலம் அரசு விரைவு போக்குவரத்து பணிமனை  முன்பு ஜனவரி 8 வேலை நிறுத்தத்தை விளக்கி வாயில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் எம்.லியாகத் அலி தலைமையில் நடைபெற்றது. சிஐடியு செய லாளர் சந்திரன், கோட்ட பொதுச் செயலாளர் கிருஷ்ண மூர்த்தி,விரைவு போக்குவரத்து  கழக சங்கத்தின் பொதுச்செய லாளர் எம் கனகராஜ், சாலை போக்கு வரத்து சம்மேளன உதவித் தலைவர் எஸ்.கே.தியாகரா ஜன் ஆகியோர் சிறப்புரையாற்றி னார்கள். மாநில உதவி செயலாளர் பி.செல்லப்பன் நன்றி கூறினார்.