கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாலிபர் சங்க மாநாடு வலியுறுத்தல்
கடலூர், ஆக. 9- கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய மாநாடு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கடலூர் ஒன்றிய 18வது மாநாடு ஒன்றிய துணைச் செயலாளர் ஜி.ஞானபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. அஞ்சலி தீர்மானத்தை குகன் முன்மொழிந்தார். பாரத் குமார் வரவேற்றார். மாவட்டச் செய லாளர் வினோத்குமார் துவக்கி வைத்து பேசினார். ஒன்றிய செயலாளர் எம்.கலைவாணன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். வரவு-செலவு அறிக்கையை ஒன்றிய பொருளாளர் ஏ.சிவன் ராஜ் முன்மொழிந் தார். மாநாட்டை நிறைவு செய்து மாநில இணைச் செயலாளர் செல்வராஜ் உரை யாற்றினார். நிர்வாகிகள் தேர்வு ஒன்றிய தலைவராக ஜி.ஞானபிரகாஷ், செயலாளராக எம்.கலைவாணன், பொருளாளராக பி.பாரத் குமார் தேர்வு செய்யப்பட்டனர். வெள்ளக்கரை ஆரம்ப சுகாதார நிலை யத்தில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பதை உறுதி செய்வதுடன், உயிர்காக்க மருந்துகளை வைக்க வேண்டும், வடக்கு ராமாபுரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டியை கட்டிக் கொடுக்க வேண்டும், மலையடி குப்பத்தில் அமைந்திருக்கும் காலனி தொழிற்சாலை திட்டத்தை திரும்ப பெற வேண்டும், கடலூர் ஒன்றிய பகுதிகளில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.