tamilnadu

img

வடசென்னையில் வாலிபர் சங்கத்தின் “மனித நேய விழா”

வடசென்னையில் வாலிபர் சங்கத்தின் “மனித நேய விழா”

சென்னை, அக்.5- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வடசென்னை பெரம்பூர் பகுதிக் குழு சார்பில் “மனித நேய விழா” என்ற தலைப்பில் ரத்த தானம் முகாம், கண் சிகிச்சை முகாம், உடல் தானம், உறுப்பு தானம் நிகழ்ச்சி பெரம்பூர் முத்தமிழ் நகரில் சனிக்கிழமை (அக். 4) நடைபெற்றது. இதில் மார்பக புற்றுநோய் பரி சோதனை, இதய பரிசோதனை, அலர்ஜி & நுரையீரல் பரிசோதனை,  கண் பரி சோதனை & சிகிச்சை, மூத்திரப்பை சுரப்பி குறிப்பான ஆன்டிஜன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 350க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். 20 பேர் உடல் தான மும், 20 பேர் உடல் உறுப்பு தானமும் செய்தனர். டாக்டர் அகர்வால் கண் ஆராய்ச்சி மையம், சிப்லா, ஜேபி டயக்னஸ்டிக்ஸ், எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவக் குழுவினர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். கிண்டி அரசு மருத்துவக் குழுவினர் குருதியை சேகரித்துச் சென்றனர். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ர மணியன், வட சென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர், பெரம்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், மருத்து வர் சரத்ராஜ் ஜெயச்சந்திரன் ஆகியோர் ரத்த தானம், உடல் தானம், உறுப்பு தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.