tamilnadu

img

யானைகவுனி ரயில்வே மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை, மே 13- சென்னை சென்ட்ரல் மற்றும்  பேசின் பாலம் ரயில் நிலையங்க ளுக்கு இடையே இருப்புப் பாதையைக் கடக்கும் வகையில் யானைகவுனியில் மேம்பாலம் உள்ளது.

இந்தப் பாலம் வால்டாக்ஸ் சாலையையும், ராஜா முத்தையா சாலையையும் இணைக்கும் ஒரு முக்கியமான பாலமாக இருந்து வரு கிறது. இந்த பாலம் மிகவும் பழமை யானதாகும். இது பழுதடைந்த நிலையில் இருந்ததால் பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த பாலத்தில் போக்கு வரத்து தடை விதிக்கப்பட்டது.

இந்த பாலத்தில் 50 மீட்டர் நீள முள்ள பகுதி ரயில்வே துறையின ரால் நீண்ட நாட்களாக பராமரிக்கப் பட்டு வந்தது. தற்போது, இந்தப் பகுதியை இடித்துவிட்டு 156.12 மீட்டர் அளவுக்கு ரயில்வே துறை யின் மூலம் பாலம் அமைக்கவும், பாலத்தின் இருபுறமும் 364.23 மீட்டர் அளவுக்கு சாய்தள சாலை மாநகராட்சி சார்பில் அமைக்கவும் திட்டம் தீட்டப்பட்டு அதற்கான பணி கள் நடைபெற்று வந்தது.

அதன்படி, வால்டாக்ஸ் சாலை யில் பக்கம் 165.24 மீட்டர், ராஜா முத்தையா சாலையின் பக்கம் 198.99 மீட்டர் நீளத்துக்கு சாய்தள சாலை மாநகராட்சி சார்பில் மூலதன நிதியின் கீழ், 33 கோடி ரூபாய், ரயில்வே துறை மூலம் 40 கோடி 48 லட்சம் ரூபாய் என மொத்தம் ரூ.73  கோடி செலவில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு வரு கிறது.

இந்நிலையில் இந்த பாலம் தொடர்பான பணிகளை மாநக ராட்சி ஆணையர் ஜெ.ராதா கிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மே மாதம் இறுதி யில் இந்த பாலத்தை ஒப்படைக்க ரயில்வே துறையிடம் கேட்டுள் ளோம். ஒப்படைத்ததும் ஜூன் மாதத்தில் இந்த பாலம் பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப் படும் என்று அவர் கூறினார்.

;