tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தமிழ்நாடு வீரர் மாரியப்பன் தங்கம்

கோபி, மே 21- ஜப்பான் நாட்டின் கோபி நகரில் உலக  பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொட ரின் ஆடவர் உயரம் தாண்டுதல் (டி-63)  பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற மாரியப்பன் தங்கவேலு இறுதி சுற்றில்  அமெரிக்க வீரர்களான எஸ்ரா ப்ரீச், சாம்  க்ரூ ஆகியோருடன் தங்கப்பதக்கத்திற் காக கடுமையான முறையில் போராடி னார். இறுதியில் 1.88 மீட்டர் தாண்டி மாரி யப்பன் தங்கவேலு தங்கப்பதக்கத்தை வென்றார். 

மாரியப்பன் தங்கவேலுக்கு கடும்  போட்டியளித்த அமெரிக்க வீரர்களான  எஸ்ரா ப்ரீச் (1.85 மீ) வெள்ளிப்பதக்க மும்,  சாம் க்ரூ (1.82 மீ) வெண்கலப்பதக்க மும் வென்றனர். உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர் மாரியப்பன் தங்க வேலுவுக்கு நாடு முழுவதும் வாழ்த்துக்  கள் குவிந்து வருகின்றன.

போதைப் பொருள் கடத்தல் விவகாரம்
ஜாபர் சாதிக் மனைவி- சகோதரரிடம் விசாரணை

சென்னை, மே 21- சர்வதேச நாடுகளுக்கு ரூ. 2 ஆயிரம்  கோடி அளவுக்கு உயர் ரக போதை பொருள் மூலப் பொருட்களை கடத்திய  வழக்கில், சென்னை சாந்தோம் பகுதி யைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவர் தேசிய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்

பின்னர் அவரது நெருங்கிய நண்பர்  சதா (எ) சதானந்த் கைது செய்யப்பட் டார். இதைதொடர்ந்து, ஜாபர் சாதிக் மற்றும் இயக்குநர் அமீர், அப்துல் பாசித்  புகாரி, சையது இப்ராஹிம், ரகு உள்  ளிட்டோருக்கு சொந்தமான வீடு, அலு வலகங்கள் என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் தீவிர சோதனை நடத்தி னர். ஜாபர்சாதிக் மனைவி அமீனாவை நேரில் அழைத்து விசாரணை நடத்தி னர். இந்நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் சகோதரருக்கும் அமலாக்கத்துறை சம்  மன் அனுப்பி விசாரணை மேற்கொண் டுள்ளது.

புதிய வகை கொரோனா; அச்சம் தேவையில்லை!
சுகாதாரத்துறை அறிக்கை

சென்னை, மே 21- “சிங்கப்பூரில் தற்  போது பரவி வரும்  கே.பி.1 மற்றும் கே.பி.2 வகை கொரோனா, மைக்ரான் ஜெ.என்.1 வகையின் உட்பிரிவு கள் தான். தமிழ்நாட் டில் ஜெ.என்.1 வகை பாதிப்பு கடந்த பிப்ரவரி மாதத்திற்கு முன்னதாகவே கண்டறியப்பட்டது. எனவே, அதிலி ருந்து உருவான புதிய வகை கொரோனா  பரவல் தமிழகத்தில் எந்த பாதிப்பையும்  ஏற்படுத்தாது. எனவே, இது தொடர்பாக பொது மக்கள் அச்சப்படத் தேவை யில்லை” என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரி வித்துள்ளார்.

எனினும், “முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம். அடிக்கடி கைகளை கழுவுவது, தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்தும், இணை நோயாளிகள்  மற்றும் முதியவர்கள் முகக் கவசம் அணி வதையும் வழக்கமாகக் கொண்டிருந் தால் கொரோனாவில் இருந்து பாது காத்துக் கொள்ளலாம்” என்று குறிப்பிட் டு ள்ளார்.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அமல்

சென்னை, மே 21- தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரி களில் முதலாம் ஆண்டு தொடர்ந்து 2-ஆம், 3-ஆம் ஆண்டு பாடத்திட்ட வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வரைவு பாடத்திட்டம் தொழில்நுட்ப  கல்வி இயக்கக வலை தளத்தில் வெளி யிடப்பட்டுள்ளது. இதன்மீது கல்லூரிகள்  கருத்துகளை கூறலாம் என தொழில்நுட்ப  கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

முன்னாள் டிஜிபி  ராஜேஷ் தாஸ் மீது வழக்கு

சென்னை, மே 21- முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ், ஐஏஎஸ்  அதிகாரியான பீலா வின் கணவர் ஆவார்.  ஏற்கனவே ராஜேஷ் தாஸிடம் இருந்து விவாகரத்து கேட்டு பீலா ஐ.ஏ.எஸ். நீதிமன்றத்தில் மனுத் தாக்  கல் செய்துள்ளார். அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை கிழக்கு  கடற்கரை சாலையில் தான் தங்கியிருக் கும் வீட்டிற்கு சென்று தகராறு செய்த தாக ராஜேஷ் தாஸ் மீது பீலா ஐ.ஏ.எஸ்.  புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படை யில் கேளம்பாக்கம் போலீசார் மூன்று  பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

;