வியாழன், ஜனவரி 21, 2021

tamilnadu

எந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

பொன்னேரி, ஜன.12- மீஞ்சூரை அடுத்த குறைஞ்சூர் ரெட்டி பாளை யத்தை சேர்ந்தவர் ரமேஷ் (40). இவர் அத்திப்பட்டில் உள்ள நிலக்கரி சேமிப்பு கிடங்கில் வெல்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையல் ஞாயி றன்று (ஜன.12) காலை அவர் ராட்சத எந்திரத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது திடீரென எந்திரம் இரண்டாக உடைந்தது. இதில் சிக்கிய ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். இதில் காயமடைந்த 4 தொழிலாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நிலக்கரி  நிர்வாகம் தகவல் தெரி விக்காமல் சம்பவத்தை மூடி மறைக்க முயன்றதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து மீஞ்சூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;