tamilnadu

img

ரசாயன உப்பள தொழிலாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு: சிஐடியு கோரிக்கை

மதுராந்தகம், ஜன.22- சூனாம்பேடு அடுத்த தாங்கல் கிராமத்தில் செயல்பட்டுவரும் தனியார் ரசாயன உப்பளத்தில் பணி யாற்றும் ஒப்பந்த தொழிலாளர்க ளுக்கு பணிப்பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி சிஐடியு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு ஊராட்சிக்குட்பட்ட வில்லிப்பாக்கம் கிராமத்தில் பத்மா கெமிக்கல் என்ற ரசாயன உப்பு உற்பத்தி தொழிற்சாலை செயல்படு கிறது. சூனாம்பேடு பகுதியில் 450 ஏக்கரிலும், விழுப்புரம் மாவட்டம், கந்தாடு கிராமத்தில் 1223 ஏக்கரி லும் உப்பு உற்பத்தி தொழிற்சாலை செயல்படுகிறது. மேலும் பல அரசு இடங்களிலும் தொழிற்சாலை இயங்கிவருகிறது. இந்த இடங்க ளில் உப்பு சேர்த்தல், உப்பு வாருதல், உப்புக்கு தண்ணீர் கட்டுதல் உள்ளிட்ட இதர பணிகளில்  800 தொழி லாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பாண்டிச்சேரியில் செயல்படும் பத்மா ரசாயன தொழிற்சாலையின் கழிவுகளைக் கொண்டுவந்து, உப்பளத்தில் கொட்டி மூடப்படுகிறது. இதனால், உப்பளத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் மாசடைந்து வருகிறது. மேலும் உப்பளத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும், கிராம மக்களுக்கும்  தோல் நோய், கண் பாதிப்பு ஏற்படுகிறது.

மேலும், உப்பளத்தில் பணியாற்றிவரும் தொழிலாளர்களை  30 வருடங்களாக ஒப்பந்த ஊழியர்க ளாகவே வைத்துள்ளனர். இவர்களுக்கு  கூலி உயர்வு,  பாது காப்பு உபகரணங்கள் ஏதும் வழங்கப்படுவதில்லை.  இந்நிலையில் பத்மா கெமிக்கல் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கிட வேண்டும், சட்டக்கூலி வழங்கிட வேண்டும், நிறுவனத்தில்  தொழிலாளர்களுக்கு உட்கட்டமைப்பு வசதி செய்து தர வேண்டும், மாவட்ட ஆட்சியர் ஆணையின் படி பெண் தொழி லாளர்களுக்கு வழங்க வேண்டிய நாள் ஒன்றுக்கு  ரூ.300ஐ வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு உப்பளம் மற்றும் கடல்சார் தொழிலாளர் நலச் சங்கம், பத்மா கெமிக்கல் உப்பளத் தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. சூனாம்பேடு பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு சங்கத்தின் தலை வர் கே.உமாநாத் தலைமை தாங்கி னார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர், மதிமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்தியா, செய்யூர் சட்டமன்ற உறுப்பி னர் ஆர்.டி.அரசு, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வாசு தேவன்,  மாவட்டக்குழு உறுப்பினர் டி.கிருஷ்ணராஜ், செய்யூர் வட்டச் செயலாளர் எஸ்.ரவி, உப்பளச் சங்க கவுரவத் தலைவர் சாஞ்சிவி சேகர், வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் க.புருஷோத்தமன், சிஐடியு நிர்வாகிகள் என்.மோகன், எஸ்.கோவிந்தசாமி, வெள்ளிக்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.