tamilnadu

img

பெண்கள் புகார் அளிக்க குழு அமைக்க வேண்டும்

பெண்கள் புகார் அளிக்க குழு அமைக்க வேண்டும் 

 புதுச்சேரி அரசுக்கு மாதர் சங்கம் வலியுறுத்தல்

புதுச்சேரி, செப்.10- தனியார் நிதி நிறு வனங்களால் பாதிக்கப்படும் பெண்கள் புகார் அளிக்க குழு அமைக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசை அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தரராமன், மாநிலத் தலைவர் முனி யம்மாள், செயலாளர் இள வரசி ஆகியோர் புத னன்று (செப்.10) செய்தி யாளர்களிடம் கூறிய தாவது:- நாடு முழுவதும் நுண்நிதி நிறுவனங்களின் அதிக வட்டியால் பாதிக்கப் படுவது பெண்கள்தான். எனவேதான்,  மாதர் சங்கத்தின் சார்பில்  22 மாநிலங்களில் 7 ஆயிரம் பேரிடம் பொதுவிசாரணை நடத்தப்பட்டது.   விசார ணையின் முடிவில் நிதி நிறுவனங்களால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என்பது தெரிய வந்தது. சுயஉதவிக் குழு பெண்கள் சேமிப்பில் கவ னம் செலுத்துகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு பெண்களை மையமாக வைத்து தனியார்  வங்கி களும், நுண் நிதி  நிறுவ னங்களும் பெண்களுக்குக் கடனை அதிக அளவில் கொடுக்கின்றனர்.பின்னர் வசூலிக்கும் கடனுக்கான வட்டி அதிகப்படியாக இருக்கிறது. சில நேரங்க ளில் 24  விழுக்காடு முதல் 48  விழுக்காடு வரை அடா வடியாக கூடுதல் வட்டியை வசூலிக்கின்றனர். கடன் கொடுத்துவிட்டு வசூலிக்கும்போது பெண்க ளைத் தரக்குறைவாக நடத்துவது, பாலியல் ரீதியாக துன்புறத்துதல்  உள்ளிட்ட நடவடிக்கையால் பெண்கள் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். தங்களுக்குச் சொந்தமான வீடு உள்ளிட்ட சொத்து களை இழந்தும் வரு கின்றனர். இது ஒரு முக்கியமான பிரச்சனையாக மாதர் சங்கம் கையில் எடுத்துள்ளது. புதுச்சேரியில் மட்டும் 43 சிறிய நிதி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவை உரிமம் பெற்று செயல்படுகின்றனவா என்று தெரியவில்லை. ஆனால் அதிகப்படியான கடன் வட்டியை வசூலித்து வருகின்றன. ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள வட்டியை இந்த நிறுவனங்கள் வசூலிப்பதில்லை.  சமூக சீர்குலைவை ஏற்படுத்தும் இப்பிரச்சனையில் மாநில அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று மாதர் சங்கம் வலி யுறுத்துகிறது. அதேபோல் இந்த நிறுவனங்களில் ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள அதிகபட்ச வட்டி நிர்ண யத்தை நிர்ணயம் செய்ய புதுவை அரசு உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். அதிகவட்டியால் பாதிக்கப் பட்ட பெண்கள், புகார் அளிக்கும் வகையில் தனி யாக புகார் குழு ஒன்றை புதுவை அரசு ஏற்படுத்த வேண்டும். இது குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சி யரிடம் மாதர் சங்கம் சார்பில் மனு அளித்துள் ளோம். மேலும் புதுச்சேரி காவல்துறை தலைவரையும் சந்தித்து விரைவில் புகார் மனு அளிக்க உள்ளோம்.  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது மாதர் சங்கத்தின் நிர்வாகி கள்  சத்யா,  மாரிமுத்து, உமா, ஜானகி ஆகியோர்  உடனிருந்தனர்.