tamilnadu

வணிக வளாகங்கள் மூடப்படுவதால் விலைவாசி உயரும்: விக்கிரமராஜா

சென்னை, மார்ச் 17- வணிக வளாகங்கள் மூடப்படுவதால் அத்தியாவ சியப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலை வாசி உயரும் என தமிழ்நாடு  வணிகர் சங்கங்களின் பேர மைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தமிழக  முதல்வர் எடப்பாடி கே.பழனி சாமிக்கு கடிதம் எழுதி யுள்ளார். இதுகுறித்து அந்த கடி தத்தில் கூறப்பட்டுள்ளதா வது: தமிழ்நாடு வணிகர் சங்  கங்களின் பேரமைப்பு தமிழக  அரசு எடுக்கும் மக்கள் நல  மேம்பாட்டு நடவடிக்கைக ளுக்கும், இயற்கை பேரிடர்  காலங்களிலும் சரி, சுகாதார  நோய்த் தடுப்பு நடவடிக்கை களிலும், மலேரியா, நிமோ னியா, டெங்கு விழிப்புணர்வு முகாம்களிலும் முன்னிலை யில் நின்று அரசோடு தோள் கொடுத்து வருகின்றது. கடந்த ஒரு மாத காலமாக கொரோனா விழிப்புணர்வு முகாம்களை நடத்தி, விளம்  பர நோட்டீஸ்கள் விநியோ கிக்கப்பட்டன. மேலும் அனைத்து கிளைச் சங்கங் கள் முதல் மாவட்டங்கள் வரை மாநகராட்சி, நக ராட்சி ஒன்றியம், தாலுகா பஞ்சாயத்து, உள்ளாட்சி அமைப்புகள், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி கள், மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் என  அனைவரோடும் ஒருங்கி ணைந்து கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்திற்கு துணை நின்று வருகின்றது. இந்நிலையில் தமிழக அரசு வணிக வளாகங்கள், திரை அரங்குகள், மக்கள் கூடும் பொது இடங்களுக்கு தடை விதித்திருப்பதை வர வேற்றாலும், அதனால் ஏற்படும் பின் விளைவுகளை  அரசுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது. மக்களின் அன்றாட அத்தியாவசியப் பொருட்களுக்கு பற்றாக் குறை ஏற்பட்டு, வணிக முடக்கம், பொருட்கள் தட்டுப்  பாடுகளால் விலைவாசி உயரும். பொருளாதாரப் பின்  னடைவு ஏற்படும். மேலும்  அரசின் வருவாய் இழப் போடு, வணிகர்கள் வாழ்வா தாரம், பணியாட்களின் தேவைகள், வேலை செய்  வோருக்கான ஊதிய விநி யோகத்தில் இடர்பாடுகள் ஏற்படும்.  இதனால் அரசுக்கும்,  அவப்பெயர் உருவாகும்  என்பதை கருத்தில் கொண்டு, அத்தியாவசியமான வணிக  வளாகங்களை சிறிய விழிப்பு ணர்வு, சுகாதார மேம் பாட்டுக்கு ஏற்பாடு, கிரிமி  நாசினி தெளிப்பு போன்ற வற்றில் கவனம் செலுத்தி வணிகம் தொடர்ந்திட அரசு  ஒத்துழைப்பு நல்கி, அனைத்து மக்களும் கொரோ னவை விழிப்புடன் எதிர் கொள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அன்புடன் வேண்டுகிறது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.