tamilnadu

img

விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என எச்சரிக்கை!

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவிப் பெரும் மற்றும் தனியார்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குக் காலாண்டு தேர்வு இன்றுடன் முடிவடைகிறது. இன்று முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. மீறி நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளி இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விடுமுறை நாளில் சிறப்பு வகுப்புகளை நடத்த நீதிமன்றம் தடை விதித்ததைச் சுட்டிக்காட்டி சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.