விழுப்புரம் , ஜூன் 14- விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் திமுக வேட்பாள ராக அறிவிக்கப்பட்டுள்ள அன்னியூர் சிவா விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
விக்கிரவாண்டி சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் அன்னியூர் சிவா மற்றும் திமுகவின் நிர்வாகிகள் மாவட்ட பொருளாளர் இரா.ஜனகராஜ், திமுக முன்னாள் எம்எல்ஏ செ.புஷ் பராஜ் ஆகியோர் மார்க்சிய கம்யூனிஸ்ட்கட்சியின் விழுப்புரம் மாவட்டக் குழுவின் அலுவலகத்திற்கு வருகைதந்து, மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணி யன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீ.இராதா கிருஷ்ணன்,பி.குமார், ஆர்.டி.முருகன்,காணை ஒன்றிய கட்சி செயலாளர் பி. சிவராமன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏ.கிருஷ்ண மூர்த்தி, கே. வீரமணி ஆகி யோரை சந்தித்து பொன் னாடை அணிவித்து ஆதரவு கோரினார். சிபிஎம் சார்பில் திமுக நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்து ஆதரவு தெரிவித்தனர்.